இவர் ஒரு இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும், அரசியல்வாதியும், மக்கள் சேவகரும் ஆவார். இவர் நெய்வேலியில் நிலக்கரி இருப்பதை கண்டறிந்து, நெய்வேலி நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் அமைக்க காரணமாகவும், நிறுவனம் அமைய 620 ஏக்கர் விளைநிலத்தை தானமாக கொடுத்தவரும் ஆவர்.அன்றைக்கு தென்னார்காடு மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த கடலூர் வட்டத்தில் பண்ருட்டி அருகில் திருக்கண்டலேஸ்வரம் என்ற கிராமத்தில் செங்குந்த கைக்கோளர் மரபில் வசதிவாய்ந்த பெருநிலக்கிழார் தி.வீ. மாசிலாமணி முதலியார் – சொர்ணத்தம்மாள் தம்பதியருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். இவர் குடும்பம் பெரும் அளவில் ஜவுளி மற்றும் விவசாயம் செய்து வந்தனர். இவர் கடலூர் மற்றும் மெட்ராசில் கல்வி பயின்றார்.